LCI Learning

Share on Facebook

Share on Twitter

Share on LinkedIn

Share on Email

Share More


(Guest)

People divided on lines of caste & religion by t.n. police.

 

 

VILLAGERS DIVIDED ON LINES OF CASTE & RELIGION BY SELFISH & IRRESPONSIBLE POLICE IN TAMILNADU.




 

மேலக்கோயில்பட்டியில் கோஷ்டி மோதல்

 
மேலக்கோயில்பட்டியில் கோஷ்டி மோதல்:



வத்தலக்குண்டு : மேலக்கோயில்பட்டியில் நடந்த கோஷ்டி மோதலில், போலீசாருக்கு பயந்து, ஆண்கள் தலைமறைவாக உள்ளனர்.இங்கு ஆறு மாதங்களாக, பொது இடம் தொடர்பாக பிரச்னை இருந்தது. கடந்த வாரம் இறந்தவருக்கு சடங்கு செய்யும் ஊர்வலத்தின் போது பிரச்னை முற்றி, இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர்.



ஆறு பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இரு தரப்பிலும் பெயர் தெரியாத 139 நபர்கள் மீது வழக்கு பதிவானது. இதில் போலீசார் கைது செய்யக்கூடும் என்பதால், மூன்று நாட்களாக ஆண், பெண்கள் தலைமறைவாகினர். பள்ளி துவங்கியதால் பெண்கள் கிராமத்திற்கு திரும்பினர். ஆண்கள் தலைமறைவாகவே உள்ளனர். போலீசார் நாள்தோறும் இரவு ரோந்தில் ஈடுபட்டு கைது செய்வதில் தீவிரம் காட்டுகின்றனர். இந்நிலையில் பொது இடத்தில் கிறிஸ்தவர்களால் கட்டப்பட்ட பீடம், தாசில்தார் முன்னிலையில் இடிக்கப்பட்டது.





எனது கருத்து:



எனக்குப் பிரியமான இந்தியக் குடிமக்களே! வணக்கம்.



"மேலக்கோயில்பட்டியில் கோஷ்டி மோதல்" என்ற தினமலரில் 22-07-11 அன்று வெளியான செய்தி என்னைப் போன்ற மேலக்கோயில்பட்டி கிராமத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கும் . எனினும், மேற்படி செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கவில்லை. காரணம் , மேற்படி கோஷ்டி மோதல்( ஜாதிச் சண்டை) சட்டத்தைக் காக்கக் கடமைப்பட்டுள்ள காவல் துறையினரால் வேண்டுமென்றே அவர்களுடைய சுய நலத்திற்காகவும், பாதுகாப்பிர்க்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான செய்தியை பல மாதங்களுக்கு முன்பே நான் அறிந்திருந்தேன். அதோடு நில்லாமல், நான் அறிந்து வைத்திருந்த மேற்படித் தகவலை 10-03-2010 தேதியிட்டு ஒரு விரிவான கடிதத்தைத் தகுந்த ஆவணங்களுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் அன்றைய தலைமை நீதியரசர் ( தற்போது உச்ச நீதி மன்ற நீதியரசர்) அவர்களுக்கும், அதன் நகல்களை மற்றைய நீதித்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அன்றைய மாநில முதல்வர் உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பத்திரிக்கைகள், தொலைக்காட்ச்சிகளுக்கும் அனுப்பி வைத்திருந்தேன் . நான் ஒரு வழக்கறிஞராக இருந்தும், என் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள புகார்களை என்னால் நிரூபிக்கமுடியாமல் போகிற பட்ச்சத்தில் என்னைத் தூக்கிலிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொண்ட பிறகும், என் புகாரை மற்ற புகார்களைப் போல் யாரும் கண்டுகொள்ளவில்லை.



அதன் விளைவு என் கிராமத்தில் தற்போது நல்லது கெட்டதைக் கவனிக்க எந்த ஆண் மகனும் ஊரில் இல்லை என்ற செய்தி வருகின்றது. நம்முடைய நீதி வழங்கும் முறை அல்லது அமைப்பு நீர்த்துப் போய்விட்டது என்பது என்னுடையக் குற்றச்சாட்டு. அது பொய் என்று மெய்ப்பிக்கும் பொறுப்பும், வல்லமையும் இந்திய நீதித்துறைக்கு மட்டுமே உண்டு என்பது எனது கருத்து. என்னுடைய ஆதங்கத்தை என்னுடைய இணையத் தளத்தில் அநீதி (INJUSTICE) என்ற பக்கத்தில் தெரிவித்துள்ளேன். அதன் காரணமாக எனக்குப் பல பிரச்னைகள் வந்துகொண்டுள்ளது. வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண்கள் 658 / 2007 (C.C. No. 63/2009 : Crime No. 658/2007) , 700/2007, மற்றும் 701 /2007 ஆகியவற்றின் குற்றப் புலனாய்வு அதிகாரிகள், அவர்கள் கூடிக் குலவும் ரௌடிகள் மற்றும் அவர்களுக்கு என்றென்றும் ஆசி வழங்கி வரும் முன்னாள் ஆளும் கட்சிப் பிரமுகர்கள் பற்றி பெயரைக் குறிப்பிடாமல் என்னுடைய இணையத் தளத்தில் நான் தெரிவித்துள்ள கருத்துக்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் ஆள்வறைக்குட்பட்டுள்ள வத்தலக்குண்டு காவல் நிலையம் , நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் நீதிமன்றங்களில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் உள்ளது. எனவே எண் இணையத் தளத்தில் ஆபாசச் செய்திகளை உலவ விட்டு நாசம் செய்ய இருப்பதாக எனக்கு பல முறை மிரட்டல் கலந்த தகவல் வந்து கொண்டுள்ளது.
https://www.jeevaganadvocate.com/injustice.php


Learning

 1 Replies

Dr. MPS RAMANI Ph.D.[Tech.] (Scientist/Engineer)     01 August 2011

From your report it appears that the incidents occured during the DMK government. DMK was ruling for 5 years. Have these things started only recently? Caste conflicts and the police siding with one or the other groups are usual in Tamilnadu and also in other parts of the country, particularly in Bihar and U.P. Caste leaders shamelessly form political parties with the support of their own castes. The policeman also belongs to one caste or the other.


Leave a reply

Your are not logged in . Please login to post replies

Click here to Login / Register  


Related Threads


Loading