LCI Learning
Master the Art of Contract Drafting & Corporate Legal Work with Adv Navodit Mehra. Register Now!

Share on Facebook

Share on Twitter

Share on LinkedIn

Share on Email

Share More

Queries Participated

Ganesh   24 September 2014 at 22:29

என் சுய சம்பாத்ய சொத்து பற்றி

அன்பார்ந்த வழக்கறிஞர்களே,
என் வயது 65, நான் ஒரு வெல்லம் வியாபாரி, எனக்கு 2 மகன்கள்...
என் மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து 3 குழந்தைகள் இருக்கு, என் இரண்டாவது மகனுக்கு திருமணம் முடிந்து குழந்தையில்லை, இரண்டாவது மகன் போலியோவினால் பாதிக்கப்பட்டு நடக்க இயலாதவன்...
என் சுய சம்பாத்யத்தில் 3 வீடுகள் வாங்கினேன், அதில் ஒன்றை என் மனைவி பெயரில் வாங்கியுள்ளேன், இரண்டாவது மகன் உடல் ஊனமுற்றவன் என்பதால், அவன் பெயரில் ஒரு வீட்டினை உயில் எழுதிவைத்துவிட்டேன்..
இன்னொரு வீடு என் பெயரில் இருக்கிறது...
ஒரு வாகனவிபத்தில் சிக்கி என் முதுகு எழும்பு முறிந்து சறியாக நடக்க முடியவில்லை...
என் செலவுகளுக்கு வீட்டில் இருந்து வரும் வாடகையை நம்பி உள்ளேன்..
வாடகையை வைத்து நான், எனது மனைவி, என் இரண்டாவது மகன் குடும்பமும் சாப்பிடுகிறோம். என் முதல் மகன் குடியிருக்க ஒரு வீடும் ஒரு கடையும் குடுத்துள்ளேன்.
அதற்கு அவன் எனக்கு எந்த வாடகையும் கொடுப்பதில்லை, எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை, என்னை வந்து பார்ப்பதும் இல்லை..
என் தந்தை எனக்கு 1/2 ஏக்கர் நிலம் கொடுத்தார், 15 ஆண்டுகளுக்கு முன்னால் அதை என் வியாபார நஷ்டத்தை சமாளிக்க விற்றுவிட்டேன். அது என் பெயரில் இருந்ததால் என் மகங்கள் கையொப்பம்மின்றி அவர்களுக்கு தெரிந்தே விற்றேன்.
இப்போது என் மூத்த மகன் என் பெயரில் உள்ள வீட்டினை அவன் பெயரில் எழுதிக்கொடுக்க வற்புருத்துகிறான், முடியாதென்றால் என் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன் என்றும், எனக்கு வரும் வாடகை பணத்தை வராமல் செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறான்..
அவன் குடியிருக்கும் வீடு நான் சுயமாக சம்பாதித்து வாங்கி என் பெயரில் இருக்கிறது, போலிஸ், கோர்ட், என்று சென்றாள் அவமானம் என கருதி நான் செல்ல தயங்குகிறேன்...
எனக்கு ஆங்கிலம் தெரியாது, ஆகையால் தமிழில் என் கேள்விகளை சமர்ப்பிக்கிறேன், தயவு செய்து, கீழே வரும் என் கேள்விகளுக்கு ஆலோசனை தாருங்கள்..
1). எனக்கும் என் மனைவிக்கும் மருத்துவ செலவு அதிகமாக வருவதால் என் மூத்த மகனிடம் மாதா மாதம் செலவுக்கு பணம் கேட்க எனக்கு உரிமை உள்ளதா?
2)என் மூத்த மகனால் என் மேல் வழக்கு தொடர்ந்து என் பெயரில் உள்ள சொத்துக்களை அவனால் முடக்க முடியுமா?
3)நான் சம்பாதித்த, என் பெயரில் உள்ள வீட்டில் உட்கார்ந்துகொன்டு என்னிடம் சன்டை போடும், என்னை துன்புருத்தும் என் மகன் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியுமா?
தயவு செய்து எந்த விதமான சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்தாள் நானும், கால்கள் நடக்க முடியாத என் இளைய மகனும் பிரச்சனையின்றி வாழ முடியும் என்ற ஆலோசனையை கூறுங்கள்..
இப்படிக்கு.. s.கனேசன்.